நடிகர் விஜய் கொரோனா நிவாரண பணிகளுக்கு ரூ.1.30 கோடி நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பின் காரணமாக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என்று முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.இதேபோல் பிரதமர் மோடியும் பிரதமரின் நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.அதன்படி பல தரப்பினரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.அதன்படி தமிழ் சினிமாவில் நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி ,நடிகர் அஜித் ரூ.1.25 கோடி நிதி அளித்துள்ளனர்.மேலும் பலரும் நிதி வழங்கியுள்ளனர்.
unknown nodeஇந்நிலையில் கொரோனா நிவாரண பணிகளுக்காக நடிகர் விஜய் ரூ.1.30கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சமும் , தமிழக முதல்வர் நிவரண நிதிக்கு ரூ.50 லட்சமும், கேரளாவுக்கு ரூ.10 லட்சமும், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரிக்கு தலா ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும்.
மேலும் ஃபெப்சிக்கு நடிகர் விஜய் ரூ.25 லட்சமும், திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் .பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக உதவ ரசிகர் மன்றங்களுக்கு நிதியுதவி அளித்துள்ளார் நடிகர் விஜய்.