அழக்கூடாதுனு இருந்த என்ன அழ வச்சிட்டியே தலைவா என்று பிரபல இயக்குநரிடம் கூறிய விஜய் ரசிகர்கள் !!!!!
நடிகர் விஜய், அஜித் ஆகிய இருவருமே நல்ல நண்பர்கள். ஆனால் விஜய், அஜித் ரசிகர்கள் அடிக்கடி சண்டையிட்டு கொள்வது வழக்கமாக ஒன்று. ஆனால் இவ்வாறு சண்டையிட்டு கொள்வதை இரு நடிகர்களும் விரும்புவதில்லை.
இந்நிலையில் ‘ விஸ்வாசம் ‘ படத்தை நேற்று விஜய் ரசிகர் ஒருவர் பார்த்துள்ளார். இந்த படத்தை பார்த்து விட்டு அவருடைய ட்விட்டர் பக்கத்தில் விஸ்வாசம் படத்தை பற்றிய கருத்துக்களை கூறியிருக்கிறார். விஸ்வாசம் நல்ல குடும்பப்பாங்கான படம் அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்க்கலாம் என்று விஜய் ரசிகர் கூறியுள்ளார்.
மேலும் விஜய் ரசிகர் இயக்குநர் சிவாவை “அழக்கூடாதுனு இருந்த என்ன அழ வச்சிட்டியே தலைவா ” என்று பாராட்டியுள்ளார். நீங்கள் கண்டிப்பாக தளபதியை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்று தனது வலைதள பக்கத்தில் கூறியுள்ளார்.