கடந்த சில ஆண்டுகளாக இயக்குனர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் காதலித்து வந்த நிலையில், ஜூன் மாதம் பெற்றோர்களின் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்தை தொடர்ந்து தேனீலவுக்காக பல நாடுகளுக்கு சென்றார்கள்.
unknown nodeஇந்த திருமணத்தை வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் ஒளிபரப்பு செய்யும் உரிமையை பிரபல OTT- நிறுவனமான நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தது. இதனை கெளதம் மேனன் இயக்கினார். மேலும் திருமணம் வீடியோ விரைவில் வெளியாகும் என நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு ப்ரோமோ வீடியோ ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார்கள்.
unknown nodeஇந்நிலையில் நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தற்போது நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் வீடியோ குறித்து புது சூப்பரான ப்ரோமோவை வெளியிட்டுள்ளார்கள். இந்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்களேன்-ஜோதிகா அண்ணியிடம் கற்றுக்கொண்ட பாடம்.! கொழுந்தியா வெளியிட்ட சூப்பரான தகவல்….
unknown nodeஅந்த ப்ரோமோ வீடியோவில் விக்னேஷ் சிவனிடம் ஏன் தேர்வு செய்தீர்கள் என்கிற பாணியில் தொகுப்பாளர் கேள்வி கேட்க… அதற்கு விக்னேஷ் சிவன் ஜாலியாக “ஏஞ்சலினா ஜோலியும் கேட்டாங்க. ஆனால் அவங்க தென் இந்தியாவை சேர்ந்த பெண் இல்லையே. என்ன சார் கேள்வி இது” என சிரித்து கொண்டு பதிலளிக்கிறார். மேலும் விரைவில் திருமண வீடியோ வெளியாகும் என நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
Beyond the flashlights and fame, there lives a dream named Nayanthara ????#Tudum presents the story of her rise to superstardom – Nayanthara : Beyond the Fairy Tale, coming soon! pic.twitter.com/FMMAh8AQcc
— Netflix India (@NetflixIndia) September 24, 2022