மனைவி நயன்தாரா ஆசைப்பட்டதால் விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி.! ரசிகர்களுக்கு பெரிய ஷாக்…
இயக்குனர் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்து விட்டதாகவும் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அஜித் நடிக்கவுள்ள ‘ஏகே 62’ திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அந்த படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்குவதாக இருந்தது. பிறகு சில காரணங்களால் விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தில் இருந்து விலகிவிட்டார்.
இந்நிலையில், பிரதீப் ரங்கநாதனை வைத்து எடுப்பதாக முடிவு எடுத்துவிட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்ன வெளியாகவில்லை என்பதால், அவரது தற்போதைய நிலைமை என்னெவென்று தெரியாமல் இருப்பதால், அவர் என்ன செய்கிறார் என்று ஒரு சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, விக்னேஷ் சிவன் பில்டராக அவதாரம் எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அவரது மனைவியும் நடிகையுமான நயன்தாரா கேரளாவில் ஒரு பெரிய அடுக்குமாடி கட்டிடம் ஒன்றை கட்ட உள்ளதாகவும் அதற்கான வேலையை விக்னேஷ் சிவனிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிகிறது.
சாதாரண 10 வீடு கொண்ட கட்டிடம் என்றால் பரவாயில்லை, ஆனால் இது 100 வீடு கொண்ட மிகப் பெரிய அடுக்குமாடி கட்டிடம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அவர்களிடம் வைத்துள்ள பணத்தில் அந்த கட்டிடத்தை கட்ட ஆரம்பிக்க உள்ளதாகவும், அதற்கான வேலைகளை தற்போது விக்னேஷ் சிவன் கவனித்து வருவதால், இவரது இயக்கம் குறித்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லையாம்.
மேலும், நயன்தாராவும் இதற்கான பணத்தை நம் சேமிப்பில் இருந்து மொத்தமாக எடுக்காமல் நடிப்பில் சம்பாதிக்கும் பணத்தை செலவிட்டு இந்த கட்டிடத்தை முடிக்க திட்டமிட்டுள்ளாராம். இதனால், பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என எல்லா சினிமாவிலும் நடிக்க முடிவு செய்துள்ளதாகவும் அதில் வரும் பணத்தை எடுத்து இந்த விரைவில் இந்த கட்டிடத்தை முடிக்க உள்ளதாகவும் சில நம்பத்தக்க சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
இதனால், நடிகை நயன்தாராவின் கையில் தற்போது பல படங்கள் இருப்பதாகவும், அவரது நடிப்பில் வெளியான அறம் திரைப்படம் நல்ல வெற்றி பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாம்.