அமைச்சரின் இரவு விருந்துக்கு செல்ல மறுத்த வித்யாபாலன்.! படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுத்த அமைச்சர்.!

Madhya Pradesh Minister was invited Vidya Balan to a dinner party and the Minister canceled his permission to shoot Vidya Balan's movie .

மத்திய பிரதேச அமைச்சர் வித்யா பாலனை இரவு விருந்துக்கு அழைத்து ,அதனை அவர் மறுத்ததால் வித்யாபாலனின் ஷெர்னி படப்பிடிப்பை காடுகளில் நடத்துவதற்கான அனுமதியை அமைச்சர் ரத்து செய்ததாகவும் கூறப்படுகிறது.

தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தவர் பாலிவுட் நடிகை வித்யா பாலன்.தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் ‘ஷெர்னி’ .இந்த படத்தின் படப்பிடிப்பானது மத்திய பிரதேசம் மாநிலம் பால்காட் மாவட்டத்தில் உள்ள காடுகளில் நடைபெற்று வந்தது .

இந்நிலையில் தற்போது வித்யா பாலனின் ஷெர்னி படத்தின் படப்பிடிப்பு நடக்கும் காடுகளில் இரண்டு பேர் மட்டுமே செல்ல அனுமதி என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.இதனால் படப்பிடிப்பு நடத்த சிக்கல் ஏற்பட்டுள்ளது . வனத்துறையினரின் இந்த திடீர் தீர்ப்புக்கு மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷா தான் காரணம் என்று கூறப்படுகிறது.

ஏனெனில் அமைச்சர் அவர்கள் வித்யா பாலனை இரவு விருந்துக்கு செல்ல அழைத்ததாகவும் ,அதற்கு வித்யா பாலன் மறுத்ததாகவும் கூறப்படுகிறது . அதனால் தான் படப்பிடிப்பிற்கான அனுமதியை வனத்துறையினர் மறுத்ததாக கூறப்படுகிறது.