ஷாருக்கான் காலில் விழுந்த அட்லீ…ஆடிப்போன அரங்கம்! வைரலாகும் வீடியோ…
Atlee: பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் காலில், இயக்குனர் அட்லீ விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இருந்தாலும் சிலருக்கு அது வெறுப்பை உண்டாக்கியுள்ளது. அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படம் கடந்த ஆண்டு வெளியாகி வசூலில் சக்கைபோடு போட்டது.
READ MORE – தனுஷ் மட்டும் அதை பண்ணலனா ‘அனிருத் அவ்வளவுதான்’…ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஓபன் டாக்!
இந்த நிலையில், மும்பையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 10) நடந்த ஜீ சினி விருதுகள் 2024 வழங்கும் நிகழ்ச்சியில், சிறந்த இயக்குனருக்கான விருதை நடிகை ராணி முகர்ஜி அட்லீக்கு வழங்கினார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
READ MORE – செம சிரிப்பு இருக்கு! ஓடிடியில் வெளியானது ‘வடக்குப்பட்டி ராமசாமி’!
அவ்வாறு வைரலாகும் வீடியோ ஒன்றில், மேடைக்கு செல்வதற்கு முன் காலில் விழுந்த அட்லீயை, கட்டியணைத்து ஷாருக் வாழ்த்தினார். அப்போது, விழா அரங்கமே திரும்பி பார்க்க வைத்த தருணமாக இது மாறியது. இருப்பினும், இந்த வீடியோ வைரலாக தொடங்கியதை அடுத்து நெட்டிசன்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியது. இது தேவையா என்று சிலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
View this post on Instagram
பொதுவாக மூத்த நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு மரியாதை கொடுப்பது தமிழ் சினிமாவின் பண்பு. அந்த வகையில், பாலிவுட் சினிமாவில் மிக்பெரிய நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் காலில் விழுந்து ஆசிர்வாதம் அட்லீ வாங்கியது மாறியாதை செலுத்தவதாக எடுத்துக்கொள்ளலாம்.
READ MORE – காலேஜுக்கு கெஸ்டாக வர சொன்னதுக்கு…கூலிங் கிளாஸுடன் கெத்தாக சென்ற சாக்ஷி அகர்வால்.!
ஜீ சினி விருதுகள் வழங்கும் நிகழ்வில், ஷாருக் கான், கார்த்திக் ஆர்யன், கியாரா அத்வானி, கிருத்தி சனோன், ஷாஹித் கபூர், ஆலியா பட், ரன்தீப் ஹூடா, அங்கிதா லோகாண்டே, ஆயுஷ்மான் குரானா மற்றும் ராணி முகர்ஜி போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.