ராக்கி படத்தின் விநியோக உரிமையை கைப்பற்றிய விக்கி-நயன் .!

Vignesh Sivan and Nayanthara have acquired the distribution rights for the Arun Madheswaran-directed Rocky film.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ராக்கி படத்தின் விநியோக உரிமையை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா கைப்பற்றி உள்ளனர் .

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ரிலீஸ்க்கு தயாராக உள்ள திரைப்படம் “ராக்கி” . வஸந்த் ரவி ,ரவீனா , பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.ராக்கி படத்தினை தொடர்ந்து செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் “சாணிக் காயிதம்” படத்தினை அருண் மாதேஸ்வரன் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ராக்கி படத்தின் வெளியீட்டு உரிமையை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து கைப்பற்றி உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் விக்கி மற்றும் நயனின் ரவுடி பிக்சர்ஸ் சார்பில் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவில்,எனது நண்பரான அருண் மாதேஸ்வரனும் நானும் பல ஆண்டுகளாக உதவி இயக்குனராக பணிபுரிந்தோம் . தற்போது இருவரின் பெயரையும் முதல் முறையாக ஒரு படத்தில் ஒன்றாக பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியை தருவதாக குறிப்பிட்ட அவர் ராக்கி படத்தினை நானும் நயனும் இணைந்து வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளார் .

unknown node