கடுமையான கட்டுப்பாடுகளுடன் பிரமாண்டமாக நடைபெற்ற விக்கி கௌஷல் – கத்ரீனா கைஃப் திருமணம்.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கத்ரினா கைஃப் விக்கி கௌஷல் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவருக்கும் நேற்று ராஜஸ்தான் மாநிலத்தின் மதோபர் மாவட்டத்தில் உள்ள சவாய் என்ற இடத்தில் அமைந்திருக்கும் சிக்ஸ் சென்சஸ் என்ற பழம்பெரும் கோட்டையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் பல கட்டுப்பாடுகளுடன் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இவர்களது திருமணம் பஞ்சாப் முறைப்படி ஆடல் பாடலுடன் நடைபெற்றது. கடந்த ஆறாம் தேதி திருமணம் நடைபெறும் இடத்திற்கு நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் விக்கியின் உறவினர்கள் வந்தனர். 8-ஆம் தேதி மருதாணி வைத்தல் சடங்கு நடைபெற்றது. 9-ஆம் தேதி திருமணத்திற்கான முக்கிய பாலிவுட் பிரபலங்கள் வந்தடைந்தனர். அன்று மாலையில் திருமணம் நடப்பதாக முகூர்த்தம் குறிக்கப்பட்டது.
unknown nodeகத்ரீனாவும் விக்கியும் தங்கள் திருமணத்தின் ஒளிபரப்பு உரிமையை அமேசான் பிரைம் வீடியோவுக்கு ரூ.80 கோடிக்கு விற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அமேசான் தளத்தில் ஒளிபரப்பு செய்யப்படுவதற்கு முன்பு திருமணத்திலிருந்து எந்த வீடியோவும் கசிந்துவிடாது கூடாது என்பதற்காக கத்ரீனாவும் விக்கியும் தங்கள் விருந்தினர்களை அது சமந்தமான ஒப்பந்தகளில் கையெழுத்திட வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, தங்கள் திருமண புகைப்படங்களை முதல் முறையாக கத்ரினா கைப் – விக்கி கவுசல் தம்பதி தங்களது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் இன்னும் சில நாட்களில் மும்பையில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் நடைபெறும் என கூறப்படுகிறது.