தமிழ் சினிமாவில் தனது காமெடி மூலம் சிரிப்போடு சேர்த்து சிந்திக்க நல்ல கருத்துக்களையும் கூறி வருபவர் நடிகர் விவேக். தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான காமெடி நடிகராக இருந்த விவேக் அண்மை காலமாக ஒரு சில முக்கிய படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.
அந்த வரிசையில் இவர் அடுத்ததாக முதன்மை வேடத்ததில் வெள்ளைப்பூக்கள் எனும் படத்தில் நடித்து வருகிறார். இதில் ரிட்டயர்டு போலிஸ் அதிகாரியாக விவேக் நடித்துள்ளார். இதில் அமெரிக்காவுக்கு தனது மகனுடன் சென்றுள்ள விவேக் அங்கு நடக்கும் தொடர் கடத்தல் கொலைகளை கண்டறியும் போலிஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது ட்ரைய்லரில் தெரிகிறது. இப்படத்தின் மிரட்டலான ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
DINASUVADU
unknown node