வேதாளம் தெலுங்கு ரீமேக் : சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் நடிகை தமன்னா...!

It has been reported that actress Tamanna has been chosen as the heroine in the upcoming Telugu remake of Vedalam directed by Siruthai Siva.

தெலுங்கு ரீமேக்கில் உருவாக்கவுள்ள வேதாளம் படத்தில் நடிகை தமன்னா தான் கதாநாயகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் தான் வேதாளம். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் இயக்குனர் மெஹர் ரமேஷ் இயக்கத்தில் உருவாக உள்ளது. இந்த படத்திற்கு கதாநாயகனாக சிரஞ்சீவி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே, ஆச்சார்யா எனும் படத்தில் நடித்து வரக்கூடிய சிரஞ்சீவி அடுத்ததாக வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கான கதாநாயகி தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த படத்தில் நடிக்க நடிகை தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இவர் தமிழில்  நடிகை ஸ்ருதிஹாசன் நடித்த வக்கீல் ரோலில் நடிக்கிறார் எனவும் கூறப்படுகிறது.