நடிகர் விஜய் தற்போது “வாரிசு” திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். வம்சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ராஜு தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தை பார்க்க ஆவலுடன் காத்துள்ளனர்.
இந்த படத்திலிருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ரஞ்சிதமே பாடல் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து, விஜய் சினிமாவிற்குள் நடிக்க வந்து இன்றுடன் 30 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனையடுத்து படத்தின் இரண்டாவது பாடலான தீ தளபதி எனும் பாடல் இன்று வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த பாடல் வெளியாகியுள்ளது.
இந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். பாடலை விவேக் எழுதிஉள்ளார். பாடல் மிகவும் அருமையாக இருப்பதால் கண்டிப்பாக ஹிட் ஆகிவிடும் என தெரிகிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown node