அந்த மாதிரி நடிக்க சொன்னாலே எரிச்சலா இருக்கு! வரலட்சுமி வேதனை!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டு இருப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் ஹீரோயின் கதாபாத்திரங்களிலும் சரி , வில்லி கதாபாத்திரங்களும் சரி

Varalaxmi Sarathkumar

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்துகொண்டு இருப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். இவர் ஹீரோயின் கதாபாத்திரங்களிலும் சரி , வில்லி கதாபாத்திரங்களும் சரி எல்லா கதாபாத்திரத்திற்கும் எந்த அளவிற்கு நடித்து கொடுக்க முடியுமோ அந்த அளவிற்கு அருமையாக நடித்து கொடுத்துவிடுவார்.

இந்நிலையில், எந்த மாதிரி கதாபாத்திரங்கள் கொடுத்தாலும் அதனை ஏற்று நடிக்க கூடிய நடிகை வரலட்சுமி சரத்குமார் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிப்பதில் தனக்கு எரிச்சல் வருவதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” சமீபத்தில் நான் நடித்ததில் மிகவும் பிடித்த படம் என்றால் கொன்றால் பாவம் படத்தை சொல்வேன்.

நடிகை ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!

ஏனென்றால், நன்றாக நடிக்க தெரிந்த ஒரு நடிகைக்கு அதனை விட நல்ல கதையம்சம் கொண்ட படம் அமையுமா என்பது சந்தகேம் தான். நான் சமீபகாலமாக தெலுங்கு படங்களில் நடிக்கிறேன் என்று சிலரும் கூறுகிறார்கள். தமிழில் எனக்கு பிடித்த மாதிரி சரியான கதையம்சம் கொண்ட படங்கள் எதுவும் வரவில்லை.

நல்ல கதையம்சம் கொண்ட படங்கள் வரும் போது கண்டிப்பாக அதனை தேர்வு செய்து நடிப்பேன். தமிழ் சினிமாவில் நான் பல படங்களில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துவிட்டேன். என்னுடைய வீட்டிலே கிட்டத்தட்ட மூன்று போலீஸ் உடைகள் இருக்கிறது. எனவே, போலீஸ் கதாபாத்திரத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்தாலே எரிச்சலாக இருக்கிறது.

இனிமேல் அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிப்பதை தவிர்க்கலாம் என்று நினைத்து இருக்கிறேன்” எனவும் நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார். மேலும் நடிகை வரலட்சுமி சரத்குமார் சமீபத்தில் வெளியாகி வெற்றிநடைபோடும் அனுமன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.