இரண்டாவது முறையாக பிரபல நடிகருக்கு ஜோடியாகும் வாணி போஜன்.!

Vanibhojan will next be teaming up with Pipov for the second time in a film to be made for the G5 platform.

வாணிபோஜன் அடுத்ததாக ஜீ5 தளத்திற்காக உருவாகும் படத்தில் பைபவ் உடன் இணைந்து இரண்டாவது முறையாக நடிக்கவுள்ளார்.

சின்னத்திரை மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ஓ மை கடவுளே,லாபம், லாக்கப் டிரிபிள்ஸ் ஆகிய படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வாணி போஜன்.தற்போது இவர் விக்ரம் பிரபுவுடன் ஒரு படமும், பகைவனுக்கு அருள்வாய்,கேசினோ உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.அது மட்டுமின்றி சூர்யா தயாரிப்பில் ரம்யா பாண்டியன் நடிக்கும் படத்திலும் நடிக்கவுள்ளார்.

தற்போது இவர் ஜீ5 என்ற ஓடிடி தளத்திற்காக உருவாகும் படமொன்றில் நடிக்கவுள்ளார் . ஏற்கனவே ஜீ5 தளத்திற்காக உருவாகிய லாக்கப் எனும் படத்தில் வைபவ் அவர்களுக்கு ஜோடியாக வாணி போஜன் நடித்திருந்தார்.இந்த நிலையில் தற்போதும் ஜீ5 தளத்திற்காக உருவாகும் படத்தில் நடிகர் வைபவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.இந்த படத்தினை அபியும் நானும், பயணம் போன்ற படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்குகிறார்.

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.பிரேம்ஜி இசையமைக்கவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.