ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கும் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனுடைய அடுத்த பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும் என தெரிகிறது.
unknown nodeஇந்த படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்க, மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். பொன்னியின் செல்வன் எனும் நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
unknown nodeபடத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், பிரபு, சரத்குமார், போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். படம் வெளியாக இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால், படத்தில் நடிக்கும் கதாபாத்திரங்களுக்கான போஸ்டர்களை வெளியீட்டு வருகிறார்கள்.
unknown nodeஅந்த வகையில் தற்போது படத்தில் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள கார்த்தியின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. போஸ்டரில் வந்தியத்தேவன் கெத்தான லுக்கில் குதிரையில் அமர்ந்து இருப்பது போல காட்டப்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணயத்தில் வைரலாகி வருகிறது.
The Prince without a kingdom, the spy, the swashbuckling adventurer…here comes Vanthiyathevan! #PS1 ????@madrastalkies_ #ManiRatnam pic.twitter.com/k9cc0krF2l
— Lyca Productions (@LycaProductions) July 5, 2022