பொன்னியின் செல்வன் படத்தில் தனக்கான படப்பிடிப்பை முடித்து விட்டதாக வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கும் கார்த்தி அறிவித்துள்ளார்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, லால், ஜெயராம், ரஹ்மான், சரத்குமார், பார்த்திபன் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
unknown nodeஇதில் அருள்மொழி வர்மன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் ஜெயம்ரவி தனக்கான படப்பிடிப்பை கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி முடித்தார். இந்நிலையில், ஜெயம்ரவியை தொடர்ந்து வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கும் கார்த்தி தனக்கான படப்பிடிப்பை முடித்துள்ளார்.
unknown nodeஇதுகுறித்து கார்த்தி தனத்தி ட்வீட்டர் பக்கத்தில் “இளவரசி த்ரிஷா நீங்கள் இட்ட ஆணை நிறைவேற்றப்பட்டது. இளவரசேசசசசச ஜெயம் ரவி என் பணியும் முடிந்தது” என இதன் மூலம் தனக்கான காட்சிகளை படமாக்கிவிட்டதாக அறிவித்துள்ளார்.
unknown nodeunknown nodeஇந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார். வடமாநிலங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு அரண்மனைகளில் செட் அமைத்து முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.