வல்லவன் இஸ் பேக்! 2K கிட்ஸ்களை மிரள வைத்த சிம்பு!

சிம்பு நடிக்கவுள்ள அடுத்தப்படத்திற்கான அப்டேட் நாளை மாலை 6.06க்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

silambarasan

சென்னை :வல்லவன், மன்மதன் உள்ளிட்ட படங்களில் நடித்த சிம்பு இன்றயை காலத்தில் அதே போன்ற படங்களை எடுத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துக்கூட பார்த்தால் நமது உடலில் புல்லரிப்பு ஏற்படுகிறது. அவர் அப்படியான படங்களில் நடிக்கவேண்டும் என்பது தான் ரசிகர்களுடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. அப்படியான ஒரு படத்தில் தான் சிம்பு அடுத்ததாக நடிக்கவுள்ளதாக  கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிம்பு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தம் +மன்மதன் + வல்லவன் + விண்ணைத்தாண்டி வருவாயா ஆகிய படங்கள் எல்லாம் சேர்ந்தால் எப்படி இருக்குமோ அதே போன்ற ஒரு படத்தில் அடுத்ததாக தான் வரவுள்ளதாக குறிப்பிட்டு இருந்தார். இந்த அறிவிப்பை பார்த்த சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் காத்திருந்தார்கள்.

அதனைத்தொடர்ந்து, இன்று ” டேய் 2கே கிட்ஸ் பழையபடி நான் 90ஸ் மோடில் 6.6 மணிக்கு வருகிறேன்” என கூறியுள்ளார். எனவே, சிம்பு பழைய படி வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

unknown node

இதனையடுத்து, அந்த படத்தினை யார் இயக்கப்போகிறார் என்கிற விவரமும் தகவல்களாக வெளியாகியுள்ளது. அதன்படி, சிம்புவின் அடுத்த படத்தை இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கவுள்ளார். இவர் ஏற்கனவே, ஓ மை கடவுலே படத்தினை இயக்கி இருந்தவர். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் படத்தினை இயக்கி வருகிறார்.

இந்த படத்தை இயக்கி முடித்த பிறகு சிம்புவை வைத்து அவருடைய 49-வது படத்தினை இயக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதைப்போல, இந்த படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எது எப்படியோ சிம்பு பழைய மாதிரி வல்லவன் பாணியில் நாளை வருவதால் இந்த படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பும் அதிகமாகி இருக்கிறது.