தமிழகத்தில் 60 கோடிக்கு விற்பனையான வலிமை..??

It is said that the Tamil Nadu rights of the movie Valimai have been sold for 60 crores.

வலிமை திரைப்படம் தமிழக உரிமை 60 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அஜித்குமார் நடிப்பில் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹுமா குரேஷி நடித்துள்ளார் . மேலும் அஜித்திற்கு வில்லனாக கார்த்திகேயா நடித்துள்ளார்.

மேலும் வலிமை படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1 அஜித் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் கடந்த மாதம் 15 ஆம் தேதி தெரிவித்திருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளார்கள்.

இந்த நிலையில், வலிமை படத்தின் தமிழக உரிமை 60 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த உரிமையை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் அன்பு செழியன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.