வலிமை திரைப்படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.!

வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த லேட்டஸ்ட் தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

வலிமை திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த லேட்டஸ்ட் தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார். தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியுள்ள நிலையில், வெளியாவதற்கு முன்பே வலிமை பல சாதனைகளை படைத்தது வருகிறது. ஜனவரி 1 முதல் ஜூன் 30 வரை கணக்கில் எடுத்துக்கொண்டு அதிகம் பயன்படுத்தப்பட்ட ட்வீட்டர் ஹேஷ்டேக் பட்டியலில் வலிமை படம் தான் முதலிடம் பிடித்திருந்தது.

படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொரோனா குறைந்து வரும் நிலையில், மூடப்பட்ட திரையரங்குகள் அனைத்தும் 50% பார்வையாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து, தற்போது கிடைத்த தகவலின் படி, வலிமை திரைப்படத்தை வரும் அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.