அஜித் நடித்துமுடித்துள்ள வலிமை பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் ட்வீட் செய்துள்ளார்.
நடிகர் அஜித் தற்போது வலிமை எனும் படத்தில் நடித்து வருகிறார்.போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தினை ஹெச்.வினோத் இயக்குகிறார்.நேர் கொண்ட பார்வை படத்தின் வெற்றியை அடுத்து இந்த கூட்டணி வலிமை படத்தில் இணைந்துள்ளது .அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது .
இந்த நிலையில் தற்போது அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த வலிமை படம் குறித்த அப்டேட்டை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில் அவர் கூறியது ” பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று ட்வீட் செய்துள்ளார். 1 வருடங்களுக்கு மேலாக அப்டேட் கேட்டு வந்த அஜித் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு தற்போது மகிழ்ச்சியை அளித்துள்ளது. மேலும் பர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
unknown node