தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான வடிவேலு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தற்போது மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் மாமன்னன் மற்றும் பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
unknown nodeசுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்துமுடித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் கூட, வடிவேலு பிறந்த நாளை முன்னிட்டு நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது.
இதையும் படியுங்களேன்-சினிமாவில் ஆண்களும் தான் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய வேண்டும்.! பகீர் தகவலை கூறிய அமீர்.!
unknown nodeமேலும் வடிவேலு பொதுவாக எந்த விழாவிற்கு சென்றாலும் கண்டிப்பாக அந்த விழா கலகலப்பாக இருக்கும், பாடல் பாடுவது, நடனம் ஆடுவது என வடிவேலு ஜாலியாக இருப்பார். அந்த வகையில், சமீபத்தில் ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வடிவேலு அங்கிருந்த மாணவர்களுடன் ஆடி பாடியுள்ளார்.
unknown node‘எட்டணா இருந்தா’ பாடலுக்குக் கல்லூரி மாணவர்களுடன் ஜாலியாக ஆடி பாடிய ‘வைகைப்புயல்’ வடிவேலுவின் அந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதோ அந்த வீடியோ…
unknown node