தீவிர சிகிச்சை பிரிவில் வடிவேலு குரூப் காமெடி நடிகர்... வேதனையில் திரையுலகம்..

சினிமாவில் சண்டை இயக்குனராக தனது பணியை தொடங்கியவர் வெங்கல் ராவ்.  அப்போது, சண்டைக் காட்சிகளின் போது விபத்து ஏற்பட்டு கால்முட்டி, தோள்பட்டையில் அடிப்பட்ட

சினிமாவில் சண்டை இயக்குனராக தனது பணியை தொடங்கியவர் வெங்கல் ராவ்.  அப்போது, சண்டைக் காட்சிகளின் போது விபத்து ஏற்பட்டு கால்முட்டி, தோள்பட்டையில் அடிப்பட்ட காரணத்தினால் நடிகராக மாறியவர். இவர் தமிழ் சினிமாவில் “நீ மட்டும்” என்ற படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார்.

unknown node

இந்த படத்தை தொடர்ந்து இவர் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்து இருக்கிறார். பிறகு சமீபகாலமாக இவர் படங்களில் காணவில்லை. இவர் சென்னையில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் . இந்த நிலையில், வெங்கல் ராவ் சிறுநீரகக் கோளாறு காரணமாக விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

unknown node

மேலும், நடிகர் வெங்கல் ராவின் உடல்நிலை குறித்து விஜய்வாடாவில் வசித்து வரும் அவரது மகள் லட்சுமி ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியது ” ஷூட்டிங் இல்லாத நேரம் அப்பா சொந்த ஊருக்கு வந்துவிடுவார். இப்போது. வடிவேலு சாரோட “நாய் சேகர் ரிட்டன்ஸ்” மற்றும் சில நடித்து முடித்திருக்கிறார். அப்பா வயிறு வலியால் அவதிப்பட்டார். அதனால், இங்கே உள்ள மருத்துவமனையில்  அனுமதித்தோம். கல்லீரல் கோளாறால், இப்போது  ‘அவசர சிகிச்சை பிரிவில்’ சிகிச்சையில் உள்ளார்.

unknown node

மருத்துவமனையில் ஆப்ரேஷன் பண்ணணும்-னு சொல்லியிருக்காங்க. இன்னும் ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்த பிறகு வீடு திரும்பலாம்-னு சொல்லியிருக்காங்க. என்று தெரிவித்துள்ளார். வெங்கல் ராவ் விரைவில் நலமுடன் வீடு திரும்ப ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பிராத்தனை செய்து வருகிறார்கள்.