வாடிவாசல் திரைப்படம் தொடங்கியுள்ளதாக நடிகர் சூர்யா கூறியுள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வரும் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான டிரைலர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.
இந்த படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா இன்று சென்னையில், நடைபெற்றது. விழாவில், சூர்யா, பண்டிராஜ், சத்யராஜ், பிரியங்கா மோகன், இமான், என பலர் கலந்துகொண்டார்கள். விழாவில் பேசிய சூர்யா தான் நடிக்கவுள்ள வாடிவாசல் மற்றும் இயக்குனர் பாலா படம்ஆரமிச்சாச்சு என கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
unknown nodeவாடிவாசல் திரைப்படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குகிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். படம் ஜல்லிக்கட்டு கதையை வைத்து எடுக்கப்படவுள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ளது என்று கூறலாம். விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.