உதவும் மனம் கொண்ட தல அஜித்…! சென்ராயனுக்கு என்ன உதவி செய்திருக்காருனு பாருங்களேன்….!!!
சென்ராயனை நம் அனைவருக்கும் தெரியும். இவர் பிக்பாஸ் மூலம் பிரபலமாகியுள்ளார். இந்த நிகழ்வில் தான் அப்பாவானது குறித்து அவர் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு போனது நம் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் கமல் சொன்னது போல அவர் ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதாகவும் கூறியுள்ளார்.
இவர் அண்மையில் ஒரு பெட்டியில் அஜித் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் ஊட்டியில் உன்னை கொடு என்னை தருவேன் படப்பிடிப்பு நடைபெற்ற போது அந்த இடத்தில் அவர் இருந்தாராம். அங்கு அதிக குளிராக இருந்ததால், அங்குள்ள அனைவரும் ஸ்வெட்டர் அணிந்திருந்தனர்.
அப்போது அவர் ஸ்வெட்டர் அணியாமல்குளிரில் இருந்ததால்,அஜித் அவரது உதவியாளரை அழைத்து, ஸ்வெட்டர் வாங்கி கொடுக்கும்படி கூறினாராம். ஒரு மணி நேரத்தில் அவருக்கு ஸ்வெட்டர் கையில் கிடைத்ததாம். இதனை மிகவும் பெருமையாக கூறியுள்ளார்.
source : tamil.cinebar.in