வலிமை திரைப்படத்தின் பாடல்கள் குறித்த அப்டேட்..!!

Cinema sources say that four songs in the movie Valimai are excellent and three songs are melodic.

வலிமை திரைப்படத்தில் நான்கு பாடல்கள் அருமையாக வந்துள்ளதாகவும்,  மூன்று பாடல்கள் மெலடி ரகம் என்று சினிமா வட்டாரங்கள் கூறிவருகின்றார்கள்.

இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் வலிமை . இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் வலிமை திரைப்படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவித்திருந்த நிலையில், தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால் வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஒத்திவைப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.

மேலும் விரைவில் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது வலிமை படத்தின் பாடல்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதாவது யுவன் ஷங்கர் ராஜாஇசையில்நான்குபாடல்கள்அருமையாக வந்துள்ளதாகவும். ‘விஸ்வாசம்’ படத்தின் ‘கண்ணான கண்ணே’ பாடலின் சூப்பர் டூப்பர் ஹிட்டுக்குப் பிறகு தடாலடிப் பாடல்களைத் தவிர்த்து, மெலடிகளை ரசிக்கத் தொடங்கிவிட்டாராம் அஜித். அந்த வகையில் வலிமை திரைப்படத்தில்மூன்றுபாடல்கள்மெலடி ரகம் என்று சினிமா வட்டாரங்கள் கூறிவருகின்றார்கள்.