சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திற்கு யு /ஏ சான்றிதழ்..!!

Censors have issued a U / A certificate for Sivakarthikeyan's Doctor film. The running time of the movie is 148 minutes

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். திரைப்படத்தின் ரன்னிங் டைம் 148 நிமிடங்கள்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்டர். இந்த படத்தில் சிவகார்திகேயனிற்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகனன் நடித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் யோகி பாபு ,வினய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திலிருந்து வெளியான 3 பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.

மேலும் இந்தரம்ஜான் பண்டியன்று வெளியிட உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. ஆனால் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால்,டாக்டர்படம்திட்டமிட்டபடி ரிலீஸாக முடியாத சூழல் உருவாகி உள்ளது.ரம்ஜான் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று முன்னதாக அறிவித்திருந்த நிலையில், நேற்று படத்தின் தயாரிப்பாளர் கேஜிஆர் தனது ட்வீட்டர் பக்கத்தில் டாக்டர் படத்தின் ரிலீஸ் பற்றி பேச விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார்.  தற்போது நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக படத்தை ஓடிடியில் வெளியீடுவதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் இந்த திரைப்படத்தின் ரன்னிங் டைம் 148 நிமிடங்கள் ஆக உள்ளது. விரைவில் படத்திற்கான அடுத்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.