கர்ணன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்..!!

Mari Selvaraj said on her Twitter page that Karnan's film starring Dhanush has got U / A certification.

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக மாரி செல்வராஜ் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கர்ணன் திரைப்படம் வருகின்ற 9 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு தணிக்கையில் சென்சார் குழுவினர் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனை படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

unknown node

இந்த கர்ணன் திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை பார்க்க தனுஷ் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.