கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாக்கப்பட்ட திரைப்படம் ‘ராங்கி’. இந்த படத்தின் கதையை பிரபல இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் தான் எழுதியிருக்கிறார். படத்தை அவருடைய உதவி இயக்குனரான எம்.சரவணன் இயக்கியுள்ளார்.
unknown nodeRAANGI dec 30 [Image Source; Google]
படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் சத்யா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. படத்தை பார்த்த பலரும் படம் அருமையாக இருப்பதாக கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
இதையும் படியுங்களேன்-நயன்தாரா முதல் ஹன்சிகா வரை…இந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட முக்கிய பிரபலங்கள்.!
unknown nodeRAANGI [Image Source; Google]
இந்த நிலையில், இன்று நடிகை த்ரிஷா சென்னை ரோகிணி திரையரங்கிற்கு ரசிகர்களுடன் ராங்கி படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்பார்ப்பதற்கு வந்துள்ளார். படம் முடிந்த பிறகு அங்கிருந்த ரசிகர்களுடன் த்ரிஷா செல்பியும் எடுத்துக்கொண்டார். அதற்கான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
@trishtrashers mam personally safety Secure protection ???? #expendablesbouncers #RaangiFDFS #RaangiFromToday #RaangiPressMeet #RaangiFromDec30 #RaangiDay #Trisha #TrishaKrishnan pic.twitter.com/tABTy6TJCW
— Expendables Bouncers (@Sathya45222505) December 30, 2022
மேலும், ராங்கி திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், படத்திற்கு வசூலில் நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.