விண்ணைத்தாண்டி வருவாயா படத்தை தொடர்ந்து சிம்புவிற்கு ஜோடியாகும் திரிஷா...?

It has been reported that actress Trisha will be paired with Gautham Vasudev Menon in the upcoming film starring Simbu.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிக்கவுள்ளதாக தகவல்.

நடிகர் சிம்பு ஈஸ்வரன் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து என் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகவுள்ள பத்து தல படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு வருகின்ற மார்ச் மாதம் அல்லது ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிம்பு, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேசன் தயாரிக்கவுள்ளார். மேலும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

இந்த அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது, சில்லனு ஒரு காதல் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளார்கள். இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக ஆலை, விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற திரைப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்த திரிஷா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.