சிவகார்த்திகேயனின் 'அயலான்' படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியீடு.!

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அயலான். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக

Ayalaan Trailer

இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் அயலான். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். இஷா கோப்பிகர், ஷரத் கேல்கர், பானுப்ரியா, பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்தினை PhantomFX Studios நிறுவனம் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனை முன்னிட்டு சமீபத்தில், படத்திற்கான இசைவெளியீட்டு விழா பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் சிவகார்த்திகேயன், படத்தின் இயக்குனர் ரவிக்குமார், கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ஜெயம் ராஜேஷ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள்.

எனக்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! அந்தர் பல்டி அடித்த சிவகார்த்திகேயன்!

இதனையடுத்து, ‘அயலான்’ படத்தின் ட்ரெய்லர் இன்று இரவு 8.07 மணிக்கு வெளியாகிறது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, படத்தின் டிரெய்லர் இன்று மாலை துபாயில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்காக படக்குழு துபாய் சென்றுள்ளது.

unknown node

மேலும் டிரெய்லர் துபாயின் பிரபல கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் ஒளிபரப்பப்பட உள்ளது. இப்படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ளது. மேலும், இந்த படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது.

சிவகார்த்திகேயனின் 'அயலான்' படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியீடு.!