சென்னை :சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த முடித்துள்ள “வேட்டையான்” திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது, இயக்குநர் டி.ஜே.ஞானவேல் இயக்கிய இந்தப் படம் அக்டோபர் 10, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
வேட்டையன், அதன் வெளியீட்டை நெருங்கி வரும் நிலையில், படத்தின் டிரெய்லர் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. ட்ரெய்லரில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக ரஜினி வரும் காட்சிகள் ஒவ்வொன்றும் செம்ம மாஸாக இருக்கிறது.
unknown nodeநொடிக்கு நொடி விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லை. ஜெய்பீம் படத்தில் ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் அவலங்களை பேசிய ஞானவேல், இப்படத்திலும் வேறொரு ஜானரில் தனது பாணியை சொல்ல வருகிறார். இதுவரை இல்லாத வகையில், கதை சம்பத்தப்பட்ட படத்தில் ரஜினி நடிப்பதை பார்க்க வித்தியாசமாக உள்ளது.
இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது, படம் 2 மணி நேரம் 43 நிமிடங்கள் ரன் டைம் கொண்டுள்ளது. மேலும் இப்படத்தில் ஃபஹகத் பாசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரோகினி, ராவ் ரமேஷ், ரமேஷ் திலக், கிஷோர், ரக்ஷன், ஜி.எம்.சுந்தர், சாபுமோன் அப்துசமத், அபிராமி மற்றும் ஷாஜி சென் என பலர் நடித்துள்ளனர்.
ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடிக்கவுள்ளார். படத்தில் நாகார்ஜுனா அக்கினேனி மற்றும் உபேந்திர ராவ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
