சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று திரைப்படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “சூரரைப் போற்று”. இந்த மாதம் 30ம் தேதி அமேசான் பிரேமில் இந்த படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்னும் 11 நாட்களில் இந்த சூரரைப் போற்று திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், சூர்யா ரசிகர்கள் ட்வீட்டரில்#SooraraiPottruTrailerஎன்ற ஹாஸ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.