நாளை 'மாமன்னன்' படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா...!

மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நாளை நடைபெறும்.

MAAMANNAN

மாமன்னன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நாளை நடைபெறும்.

மாமன்னன் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை பிரமாண்ட இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. அதற்காக, படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

unknown node

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாமன்னன் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது என்று கூறலாம். இந்த திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.

unknown node

MAAMANNAN [Image Source : @Udhaystalin]

இந்த திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் முதல் பாடலான ‘ராசாகண்ணு’ என்ற பாடல் மற்றும் செகண்ட் பாடலான ‘ஜிகுஜிகு ரயில்’ எனும் பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வருகிறது.

unknown node

Maamannan Second Single [Image source: file image ]

மேலும்,  படம் வரும் ஜூன் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்ப்ர்க்கப்படுகிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.