மக்கள் செல்வன் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மாமனிதன் அப்டேட்..!!

Vijay Sethupathi fans are eagerly awaiting the release of the first song of the movie Mamanithan today

மாமனிதன் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகவுள்ளதால் விஜய் சேதுபதி ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளார்கள்.

தமிழ் சினிமாவில் பிஸியாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி.பலபடங்களை தனது கைவசம் வைத்துள்ள விஜய் சேதுபதி நடித்து முடித்துள்ள படங்களில் ஒன்று மாமனிதன் . இந்த படத்தினை சீனு ராமசாமி இயக்கியுள்ளார்.இந்த திரைப்படம் சீனு ராமசாமி-விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகியுள்ள நான்காவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காய்த்ரி நடித்துள்ளார் .இவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஏற்கனவே ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது .

இந்த படத்திற்கு இளையராஜா யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா  ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டே முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது.ஒரு சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான பர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாகும் என்று நேற்று படக்குழுவினர் அறிவிப்பை வெளியிட்டனர். இதனால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் காத்துள்ளார்கள்.