அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்கியுள்ளார். படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் மஞ்சுவாரியர், மோகன் சுந்திரம்,பகவதி பெருமாள்,சமுத்திரக்கனி,அஜய்,சி.எம் சுந்தர்,ஜான் கொக்கைன், வீரா, பிரேம், ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். நேற்று படத்தில் நடிக்கும் நடிகர்கள் கதாபாத்திரத்திற்கான அறிவிப்பை படக்குழு வெளியிட்டது.
அதனை தொடர்ந்து இன்று படத்திற்கான டிரைலர் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி,படத்தின் டிரைலரை தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிட்டுள்ளார். டிரைலரில் வரும் ஒவ்வொரு காட்சிகளும் காண்போரை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. டிரைலரை பார்க்கையில், படம் பணத்தை கொள்ளையடிக்கும் சம்பவத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ளது என தெரிகிறது. எனவே கண்டிப்பாக படம் பிளாக் பஸ்டர் வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
unknown nodeதுணிவு டிரைலர் உலக சாதனை :
உலகளவில் ஹாலோகிராம் மூலம் வெளியிடப்பட உள்ள முதல் இந்திய படத்தின் டிரைலர் என்ற சாதனையை ‘துணிவு’ படத்தின் டிரைலர் படைத்துள்ளது. மலேசியாவின் ‘Kuala Lumpur City Centre ‘ என்ற இடத்தில், இன்று இரவு 11 மணிக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.