தல ரசிகர்களுக்கு கொலை மிரட்டல் !!!!!

தல அஜித் நடிக்கும் படம் 'விஸ்வாசம் 'இந்த படம் வரும் 10 ந் தேதி ரிலீஸ் ஆகிறது.இந்த நிலையில் அஜித்தின் விஸ்வாசம் வாழ்த்து போஸ்டர்களை ரசிகர்கள் ஒட்டி கொண்டு

தல அஜித் நடிக்கும் படம் ‘விஸ்வாசம் ‘இந்த படம் வரும் 10 ந் தேதி ரிலீஸ் ஆகிறது.இந்த நிலையில் அஜித்தின் விஸ்வாசம் வாழ்த்து போஸ்டர்களை ரசிகர்கள் ஒட்டி கொண்டு இருக்கின்றனர்.தேனி பாராஸ்ட் ரோடு பகுதியில் நடிகர் அஜித்தின் விஸ்வாசம் வாழ்த்து போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

இதனை மர்ம நபர்கள் சாணியால்  அடித்திருக்கின்றனர். இதையடுத்து அந்த இடத்திற்கு சென்ற அஜித் ரசிகர்கள்  அந்த நபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது அமமுக நிர்வாகி ஜெயமணி அங்கு சென்று இருக்கிறார்.

அப்போது அமமுக நிர்வாகி ஜெயமணியிடமும்  அஜித் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெயமணி காவல் நிலையத்தில் அஜித் ரசிகர்கள் மீது  புகார் அளித்தார். மேலும்  ஜெயமணியின் மகன் சூர்யா அஜித் ரசிகர்களை செல்போனில் அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது .மேலும்  இந்த குரல் பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இந்த மிரட்டல் குறித்து அஜித் ரசிகர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்கள்.