நானே வருவேன் படத்தின் மிரட்டல் அப்டேட்.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!

நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கவுள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கவுள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.

இயக்குனர் செல்வராகவன் மற்றும் தனுஷ் இருவரும் 10 ஆண்டுகளுக்கு பிறகு நானே வருவேன் படத்தில் இணையவுள்ளனர். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

unknown node

இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தின் டைட்டில் மற்றும் கதையை இயக்குனர் செல்வராகவன் மாற்ற முடிவு செய்துள்ளதாகவும், படத்திற்கு ராயன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவியது. ஆனால் இதுகுறித்து எந்த அறிவிப்பு வெளியாகவில்லை.

unknown node

மேலும், இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி தொடங்கும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆகஸ்ட் மாதம் முடிந்து, செப்டம்பர் மாதம் தொடங்கியும் இன்னும் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை.

unknown node

இந்த நிலையில், நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற தகவல் கிடைத்துள்ளது அதன்படி, இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் அதாவது அக்டோபர் மதம் துவங்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

நானே வருவேன் படத்தின் மிரட்டல் அப்டேட்.! உற்சாகத்தில் ரசிகர்கள்.!