பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர்தான் – கொண்டாடும் ரசிகர்கள்

As Ari Arjuna has been announced as the winner of the Grand Finale title held today on the Big Boss 4 show, his fans are celebrating.

பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் இன்று நடைபெற்ற இறுதி சுற்றில் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனா தான் என அறிவிக்கப்பட்டுள்ளது, இதனை அடுத்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பிரபல தனியார் தொலைக்காட்சி ஆகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்றுடன் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.  இறுதியாக ஆரி, ரியோ, சோம், பாலாஜி, ரம்யா ஆகிய 5 பேர் மட்டுமே பிக்பாஸ் வீட்டில இருந்தனர்.  வழக்கம்போல மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படாவிட்டாலும் முன்னாள் போட்டியாளர்கள் மற்றும் போட்டியாளர்களின் குடும்பத்தினர்களுக்கு நிகழ்ச்சியை நேரில் பார்ப்பதற்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் முகேன் சீசன் 4 நிகழ்ச்சிக்கான கப்புடன் சென்று உள்ளே உள்ள ஐந்து போட்டியாளர்களையும் சந்தித்துவிட்டு சோமுவை அழைத்து சென்றுள்ளார்.

unknown node

சோம், ரம்யா, ரியோ ஆகிய மூவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். பாலாஜி மற்றும் ஆரி தான் இறுதியாக இருந்தார்கள். பாலாஜிமபாலாஜி ஆரிஆரி இருவரையும் தனது இரு புறமும் வைத்துக்கொண்ட கமல் ஆரி தான் டைட்டில் வின்னர் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். 4 கோடி வாக்குகள் பெற்று ரன்னர் ஆக பாலாஜியும் 20 கோடிக்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று வின்னாரக ஆரியும் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஆரிக்கு ஏற்கனவே ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் வெளியில் உள்ள நிலையில் இந்த வெற்றியை அவரது ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்