தளபதி என்ட்ரி செதறு செதறு... வெறித்தனமாக வெளியான 'வாரிசு' பாடல் வீடியோ.!

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா,பிரகாஷ் ராஜ், சங்கீதா கிரிஷ்,

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தில் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா,பிரகாஷ் ராஜ், சங்கீதா கிரிஷ், சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த் மேகா, சம்யுக்தா கார்த்திக், ஜெயசுதா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

unknown node

Varisu First Single [Image Source: Twitter ]

ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன் சார்பில் தில் ராஜு தயாரித்து வரும், இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். படத்திற்கான முதல் பாடலுக்கான ப்ரோமோ வீடியோ இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என காலையில் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தது.

unknown node

Varisu First Single [Image Source: Twitter ]

அந்த அறிவிப்பை தொடர்ந்து, தற்போது வாரிசு படத்தின் முதல் பாடலுக்கான அட்டகாசமான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. ப்ரோமோவில் பாடலை விஜய் பாடியுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. அசத்தலான நடனத்துடன் ரஞ்சிதமே…ரஞ்சிதமே என தொடங்கும் இந்த பாடலின் முழு வீடியோ நவம்பர் 5-ஆம் தேதி  வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

unknown node

VarisuAudioRights T-Series [Image Source: Twitter ]

இந்த பாடல் அதிகம் சாப்ஸ்க்ரை கொண்ட டி சீரிஸ் யூடியூப் சேனலில் வெளியாகிறது. மேலும் வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node