நடிகை தமன்னா 32 வயதாகியும், இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் மட்டும் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் என்னவவோ, அடிக்கடி தமன்னாவின் திருமணம் குறித்த வதந்தி தகவலும் இணையத்தில் வைரலாவது வழக்கமான ஒன்று.
unknown nodeTamanna [Image Source: Twitter ]
அந்த வகையில், நேற்று தமன்னா திருமணம் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வந்தது. அது என்னவென்றால், நடிகை தமன்னா விரைவில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும், பெற்றோர்கள் அவருக்கு மாப்பிளை பார்த்ததாகவும் அதனால் அவர் திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்ததாகவும் தகவல்கள் பரவியது.
unknown nodeTamannaah [Image Source: Twitter ]
இந்த தகவல் உண்மையா..? அல்லது வதந்தியா..? என ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில், தமன்னாவே இதற்கு விளக்கத்தை கொடுத்துள்ளார். அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு படத்தின் ப்ரோமோஷனுக்காக ஆண் போல மீசை வைத்து கொண்டு வேஷம் போட்டிருந்தார்.
இதையும் படியுங்களேன்-இன்னும் அறிவிப்பே வரல.. 150 கோடிக்கு விலைபோன தளபதி 67.! அதிரடி காட்டிய ஓடிடி நிறுவனம்.!
unknown nodeTamannaah [Image Source: Twitter ]
அப்பொழுது, எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியீட்டு இவர் தான் தனது தொழிலதிபர் கணவர் என பதிவிட்டுள்ளார்.இதன் மூலம் தமன்னா திருமணம் குறித்து பரவுவது வெறும் வதந்தி தகவல் தான் என்பது தெரிய வந்துள்ளது. எனவே தமன்னாவுக்கு திருமணம் என உற்சாகமா இருந்த ரசிகர்களுக்கு இந்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
unknown node