தமிழ் சினிமாவில் 8 தோட்டாக்கள் எனும் சூப்பரான படத்தை கொடுத்ததன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் ஸ்ரீ கணேஷ். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் ஸ்ரீ கணேஷ் சமீபத்தில் அதர்வா நடிப்பில் வெளியான “குருதி ஆட்டம்” படத்தை படத்தை இயக்கி இருந்தார்.
unknown nodeஅந்த திரைப்படம் நன்றாக இருந்தாலும் கூட , எதிர்பார்த்த அளவிற்கு விமர்சனங்களை பெறவில்லை. எனவே தன்னுடைய அடுத்த படத்தில் குறைகளை சரி செய்து மக்களுக்கு பிடிக்கும் படியாக படத்தை கொடுப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.
unknown nodeஇந்நிலையில் தற்போது, தன்னுடைய நீண்ட நாள் காதலியும், நடிகையுமான சுகாசினி சஞ்சீவ் என்பவரை இயக்குனர் ஸ்ரீகணேஷ் நேற்று திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது பெற்றோர்களின் முன்னிலையில் இவர்களது திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது.
இதையும் படியுங்களேன்-தளபதி 67 படத்தில் நானும் இருக்கிறேன்… அதிரடி அப்டேட் கொடுத்த பிரபல இயக்குனர்.!
unknown nodeநடிகை சுகாசினி சஞ்சீவ் வனம், சர்பத், சீதக்காதி, மற்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான “நெஞ்சுக்கு நீதி” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர்களது திருமண புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், இவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.