இந்த நடிகர் தான் இந்தியன் படத்தில் நடிக்க வேண்டியது….!! பிரபல இயக்குனர் தகவல்….!!!
இந்தியன் படமானது வெளியாகி ஹிட் ஆகியுள்ளபடம். இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியுள்ளார். கமலஹாசன் நடித்துள்ளார். இந்த படம் மக்களிடையே சிறந்த வரவேற்பையும், பாராட்டுக்களையும்பெற்றது.
இந்நிலையில், இந்தியன் படத்தின் இரண்டாவது பாகம் தயாரிக்கவுள்ளனர். இந்தியன் படம் குறித்து இயக்குனர் சங்கர் ஒரு பேட்டியின் போது பேசியுள்ளார். அவர் கூறுகையில் அவர் இந்த படத்தின் கதை எழுதும் போது ரஜினியை மனதில் வைத்து தான் எழுதினாராம்.
இந்நிலையில், அவரை நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்துள்ளது. ஆனால் இறுதியில் முடியாமல் போன காரணத்தால் இந்த படத்தில் கமலஹாசன் நடித்துள்ளார் என்று கூறியுள்ளார். இதே போல் எந்திரன் படத்தில் கமல் நடிக்க வேண்டிய இடத்தில ரஜினி நடித்து அசத்தியுள்ளார் என பேட்டியில் கூறியுள்ளார்.
SOURCE : TAMIL.CINEBAR.IN