கர்ணன் படத்தின் மூன்றாம் நாள் வசூல் விவரம்..!!

Karnan has grossed over Rs 25 crore in Tamil Nadu in just three days of its release.

கர்ணன் திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் தமிழகத்தில் 25 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகை ரஜிஷா விஜயன் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். யோகி பாபு லால்  போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் சாதனை செய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் தமிழகத்தில் 3 நாட்களில் எத்தனை கோடிகள் வசூல் செய்துள்ளது என்ற தகவலை பார்ப்போம்.

முதல் நாளில் – 10.40 கோடி (100% பார்வையாளர்கள்)

இரண்டாம் நாளில் – 6.20 கோடி (50 % பார்வையாளர்கள்)

மூன்றாம் நாளில் – 8.40 கோடி (50 % பார்வையாளர்கள்)

மொத்தமாக இந்த திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் 25 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. சென்னையில் மட்டும் 2.01 கோடி வசூல் செய்துள்ளது. நாளுக்கு நாள் கர்ணன் படத்தின் வசூல் உயர்ந்து வருகிறது. 100 கோடி வசூல் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.