நடிகை சித்ரா தற்கொலை செய்ய இவர்கள் இருவர் தான் காரணமாம்

According to the police, actress Chitra committed suicide by hanging herself due to stress from her mother and husband.

நடிகை சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு அவரது தாய் மற்றும் கணவர் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட மன அழுத்தம் தான் காரணம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது . சித்ராவின் மரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதனையடுத்து நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பின் வெளியான அறிக்கையில் சித்ராவின் மரணம் தற்கொலை என்று காவல்துறை தெரிவித்திருந்தது .

அதனையடுத்து அவர் தற்கொலை செய்து கொள்வதற்கு காரணம் என்ன என்று விசாரித்து வந்தனர் . இந்த நிலையில் தற்போது நடிகை சித்ரா தற்கொலை செய்து கொள்வதற்கு அவரது தாய் மற்றும் கணவர் கொடுத்த மன அழுத்தம் தான் காரணம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது .மேலும்  கணவர் ஹேமந்த் சித்ராவிடம் குடித்து விட்டு பிரச்சினை செய்ததாகவும்,அதனால் அவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் காவல்துறை தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.ஏற்கனவே கணவர் ஹேமந்திடம் நடத்திய விசாரணையில் சித்ரா மன அழுத்தத்தில் இருந்ததாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது .