திரையுலகில் பிரபல நடிகர் மற்றும் நடிகைகள் காதலிப்பதும், திருமணம் செய்வதும் வழக்கமான ஒன்று தான். அந்த வகையில், ‘டார்லிங்’ கலகலப்பு 2 ஆகிய படங்களில் நடித்த நடிகை நிக்கி கல்ராணியும் ‘மிருகம்’ ஹீரோ ஆதியும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர்.
unknown nodeஇவர்கள் இருவருக்கும் கடந்த மார்ச் மாதம் நிச்சியதார்தம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இருவருக்கும் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர்களான அருண்விஜய் , நானி, சுந்தீப் கிஷன் உள்ளிட பலர் கலந்து கொண்டார்கள்.
unknown nodeகோலாகலமாக நடைபெற்ற இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்று திருமணம் செய்துள்ள இவர்களுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தின் மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
unknown nodeஇந்த நிலையில், திருமணத்தின் போது குஷியில் அஜித்தின் ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆதி, நிக்கி, நானி, சுந்தீப் கிஷன் , ஆகியோர் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளார்கள் அதற்கான வீடியோவும் வைரலாகி வருகிறது.
Natural ???? #Nani & #SundeepKishan dance in joy at #AadhiPinisetty & #NikkiGalrani‘s haldi ceremony!! ????❤️@NameisNani @sundeepkishan @AadhiOfficial @nikkigalrani #TeluguFilmNagar pic.twitter.com/KXr7zuNheC
— Telugu FilmNagar (@telugufilmnagar) May 18, 2022