கெட்ட வார்த்தை பேசிய விஷால்! ரத்னம் பட ட்ரைலர் வெளியீடு!

Rathnam Trailer : விஷால் நடித்துள்ள ரத்னம் படம் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

Rathnam Official Trailer

Rathnam Trailer: விஷால் நடித்துள்ள ரத்னம் படம் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

கமர்ஷியல் படங்களை இயக்குவதில் சிறந்த இயக்குனரான ஹரி கடைசியாக யானை திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அடுத்ததாக இயக்குனர் ஹரி விஷாலை வைத்து ரத்னம் எனும் திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை பிரியா பவானி சங்கர் நடித்து இருக்கிறார்.

படத்தில் விஷால் உடன் , சமுத்திரக்கனி, யோகிபாபு மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

அதனை தொடர்ந்து படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. ட்ரைலரில் நடிகர் விஷால் கெட்டவார்த்தை பேசுவது போல காட்சிகளும் இடம்பெற்று இருக்கிறது. வழக்கமான ஹரி படங்களில் நடக்கும் சண்டைக்காட்சிகளும் இந்த படத்தில் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

unknown node

டிரைலரை வைத்து பார்க்கையில் பிரியா பவானி சங்கருக்காக விஷால் எதிரிகளை எதிர்கொண்டு அவரை காப்பாற்றுவது போல தெரிகிறது. டிரைலரை பார்த்த பலரும்ரத்னம்ட்ரெய்லர், ரொம்ப நாளைக்கு அப்றம் ஹரி சார் படத்துல சண்டைக்காட்சிகள் அதிகமாக இருக்கிறது. கதையும் நன்றாக இருக்கும் என நினைக்கிறன் படம் ஹிட் ஆகும் எனவும் விமர்சனங்களை கூறி வருகிறார்கள். இந்த ரத்னம் திரைப்படம் வரும் வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.