அரைச்ச மாவை அரைச்ச சுந்தர் சி! வெளியானது ‘அரண்மனை 4’ டிரைலர்!

Aranmanai 4

Aranmanai 4 : சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை 4 படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் சுந்தர் சி காமெடி கலந்த படங்களை கொடுப்பதில் எந்த அளவுக்கு சிறந்த இயக்குனர் என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். இவர் இயக்கிய அரண்மனை படத்திற்காக தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இதுவரை அரண்மனை மூன்று பாகங்கள் வெளியாகி இருக்கிறது. இதில் முதல் இரண்டு பாகங்களும் மக்களுக்கு மத்தியில் நல்ல வெற்றியை பெற்றது.

ஆனால், மூன்றாவது பாகம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2021 -ஆம் ஆண்ட ஆண்டு வெளியானது. எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை என்ற காரணத்தால் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. அந்த தோல்வியை தொடர்ந்து சுந்தர் சி தற்போது அரண்மனை 4 திரைப்படத்தையும் இயக்கி இருக்கிறார்.

இந்த திரைப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, சந்தோஷ் பிரதாப், ராமச்சந்திர ராஜு, யோகி பாபு, கோவை சரளா, மொட்ட ராஜேந்திரன், சுந்தர் சி உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்தின் டிரைலர் இன்று வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி தற்போது ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லரை பார்த்த நெட்டிசன்கள் சிலர் ட்ரைலர்  அருமையாக இருப்பதாகவும் ஒரு சிலர் ‘சுந்தர் சி அரைச்ச மாவை அரைத்திருக்கிறார்’ என்பது போலவும் விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்