சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் டிரைலர் நாளை மாலை 12 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் அறிவித்துள்ளார்.
நடிகர் ஆர்யா நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “சார்பட்டா பரம்பரை” இந்த படத்தில் துஷாரா நடித்துள்ளார். இந்த திரைப்படம் வடசென்னை குத்துச்சண்டை வீரர்களின் கதைக்களத்தை கொண்டது.
இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் நேரடியாக இந்த திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வருகின்ற ஜூலை 22-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், இந்த திரைப்படத்தின் டிரைலர் நாளை மாலை 12 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்துடன் காத்துள்ளனர்.
unknown node