சியான் 60 படத்தின் தலைப்பு குறித்த புதிய தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
நடிகர் விக்ரமின் 60 வது திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விக்ரமுடன் அவரது மகன் துருவ் விக்ரமும் நடித்து வருகிறார். துருவ் விக்ரம் போலீஸ் கதாபாத்திரத்திலும், விக்ரம் கேங்ஸ்டராகவும் நடித்து வருகிறார் என கூறப்படுகிறது.
இப்படத்திற்கு தற்காலிகமாக சியான்-60 என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிந்தது. இதனையடுத்து வரும் 20 ஆம் தேதி படத்தின் தலைப்புடன் முதல் பார்வை வெளியீடபடும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தற்போது சியான் 60 படத்தின் தலைப்பு ‘மகான்’ என இருக்க வாய்ப்புள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல்கள் பரவி வருகிறது. வரும் 20- ஆம் தேதி பர்ஸ்ட் லுக் வெளியாக உள்ள நிலையில் மகான் தான் டைட்டிலாக இருக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
பாபி சிம்ஹா, சிம்ரன், வாணி போஜன் போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.