தனுஷின் 44 வது படத்திற்கு திருச்சிற்றம்பலம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் தனுஷின் 44 வது படத்தை யாரடி நீ மோகினி, உத்தம புத்திரன், குட்டி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மித்ரன் ஜவாஹர் இயக்குகிறார். படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். படத்தில், இயக்குனர் பாரதி ராஜா, நடிகர் பிரகாஷ் ராஜ், நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராசிக்கன்னா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்று காலை பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதனையடுத்து அடுத்த அப்டேட்டாக படத்தின் டைட்டில் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் நேற்று அறிவித்திருந்தது. அதன்படி படத்தின் டைட்டில் லுக் அனிருத் இசையில் வீடியோவாக சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. படத்திற்கு திருச்சிற்றம்பலம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
unknown node