பிரபுதேவா நடித்துள்ள 'WOLF' படத்தின் டீசர் வெளியானது!

முன்னணி நடனக் கலைஞரும், நடிகருமான பிரபுதேவாவின் 60வது படமான 'WOLF' படத்தில் ராய் லக்ஷ்மி மற்றும் அனசுயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

WOLF

முன்னணி நடனக் கலைஞரும், நடிகருமான பிரபுதேவாவின் 60வது படமான ‘WOLF’ படத்தில் ராய் லக்ஷ்மி மற்றும் அனசுயா பரத்வாஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சைக்கலாஜிக்கல் த்ரில்லரில் உருவாகியுள்ள இந்த படத்தை ‘சிண்ட்ரெல்லா’ புட இயக்குனர் வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளிவரவிருக்கும்  இப்படத்தின் டீசரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். டீசரில், மெய் சிலிர்க்க வைக்கும் திகில் கட்சிகளும், பிரபுதேவாவின் ஆக்‌ஷன் காட்சிகளும், அனசூயாவின் கெட்அப்பும் ஈர்க்கிறது.

unknown node

மேலும், இந்த படத்தில் வசிஷ்ட என் சிம்ஹா, அஞ்சு குரியன், ரமேஷ் திலக், லொள்ளு சபா சுவாமிநாதன், தீபா, ஸ்ரீ கோபிகா, அவினாஷ், சுஜாதா ஆகியோர் நடித்துள்ளனர். பத்திற்கு அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, அம்ரேஷ் இசையமைக்கிறார். சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளுக்கு வரவுள்ளது.